எதிர்பார்ப்பு!தனிபஸ் டெப்போ அமைய...முக்கிய ஊர்களுக்கு பஸ் வசதியில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்பார்ப்பு!தனிபஸ் டெப்போ அமைய...முக்கிய ஊர்களுக்கு பஸ் வசதியில்லை

Added : பிப் 12, 2019
Advertisement

சிங்கம்புணரி:தனித்தாலுகாவாக அறிவிக்கப்பட்ட சிங்கம்புணரியில் தனி பஸ் டெப்போ இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமாக சிங்கம்புணரி இருந்தும் இங்கிருந்து முக்கிய ஊர்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு நேரடியாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பெரும்பாலான பேருந்துகள் வெளியூர்களில் புறப்பட்டு, சிங்கம்புணரி வழியாக செல்லக்கூடியவை என்பதால், சிங்கம்புணரியில் காத்திருக்கும் பயணிகள் இப்பேருந்துகளில் அமர இடம் கிடைக்காமல் பல கி.மீ. நின்று கொண்டே பயணம் செல்கின்றனர்.இங்கிருந்து முக்கிய ஊர்களுக்கு செல்ல தேவை இருந்தும் வெளியூர் டெப்போ அதிகாரிகள் அந்த ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகளை அனுப்புவதில்லை. அப்படி அனுப்பினாலும் அப்பேருந்துகள் வேறு ஊர்களில் இருந்து புறப்படுவதால் அது சிங்கம்புணரி பகுதி மக்களுக்கு பயன்தருவதில்லை. சென்னைக்கு இங்கிருந்து 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படும் போது, அரசுப்பேருந்து ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. இதே போல் சேலம், திருச்சி, கோவை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் பக்கத்து ஊர்களுக்கு சென்று பயணம் செய்யவேண்டியுள்ளது. இத்தாலுகாவின் மற்றொரு பகுதியான எஸ்.புதுார் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பாக இப்பகுதி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் உரிய நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.இப்பகுதி மக்கள் உயர்கல்வியை பெற முடியாமல் உள்ளனர். சிங்கம்புணரியில் தனியாக பஸ் டெப்போ அமைக்கப்பட்டால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் சிங்கம்புணரி பஸ் டெப்போ அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பிலேயே இப்பகுதி மக்கள் காலத்தை ஓட்டி வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் அறிவிப்பு இல்லாமல் போனது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் சட்டசபை கூட்டத் தொடரிலாவது சிங்கம்புணரி பஸ் டெப்போ அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதி மக்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X