விவசாயிகள் வருவாய் திட்டம்: கண்காணிக்க குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் வருவாய் திட்டம்: கண்காணிக்க குழு

Added : பிப் 12, 2019
Advertisement

சிவகங்கை:சிறு, குறு விவசாயிகள் நலன் காக்கும் வருவாய் திட்டத்தை செயல்படுத்த தாலுகாவிற்கு ஒரு உதவி ஆட்சியரை கண்காணிப்பு அலுவலராக நியமித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், பிப்.,20 க்குள் முதற்கட்ட நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பொருட்டு 5 ஏக்கருக்கு உட்பட்டவிவசாயிகளை தேர்வு செய்யும் பணிகளில்அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வி.ஏ.ஓ., க்கள் சிட்டா நகல்களை கொண்டுவிவசாயி பெயர், பாலினம், புல எண், பரப்புவிபரத்தை சேகரிக்க வேண்டும். இந்த விபரத்தை ஆய்வு செய்ய கிராமங்களில் நியமிக்கப்பட்ட வி.ஏ.ஓ., ஊராட்சி செயலர், உதவி தோட்டக்கலை அலுவலர், வட்டார புள்ளியியல் அலுவலரை கொண்ட கள ஆய்வு குழுவிடம் வழங்க வேண்டும்.இக்குழு கள ஆய்வின் போது விவசாயி பிறந்தநாள், ஆதார் எண், இனம், வங்கிகணக்கு எண், ஐ.எப்.சி., கோட் எண், ஸ்மார்ட் ரேஷன்கார்டு எண், அலைபேசி எண்ணுடன் பெற்று விவசாயிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில்இக்குழுவை கண்காணிக்க சிவகங்கைக்கு கோட்டாட்சியர் செல்வகுமாரி, மானாமதுரைக்கு பிற்பட்டோர் நல அலுவலர், திருப்புவனத்திற்கு இ.ஐ.டி., பாரி நிறுவன வடிப்பக அலுவலர், இளையான்குடிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், காளையார்கோவிலுக்கு கலெக்டர் கூடுதல் பி.ஏ., (நிலம்), தேவகோட்டை உதவிகமிஷனர் (ஆயம்),காரைக்குடிக்கு கோட்டாட்சியர், திருப்புத்துாருக்கு சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர், சிங்கம்புணரிக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரை கலெக்டர் ஜெயகாந்தன் நியமித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X