அறுவடை முடிந்ததால் ஆயத்தமாகும் பெரியகோட்டை மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை முடிந்ததால் ஆயத்தமாகும் பெரியகோட்டை மக்கள்

Added : பிப் 12, 2019
Advertisement

காரைக்குடிவான்மழை வஞ்சித்தாலும் வாஞ்சை நீங்காத பெரியகோட்டை, அரியக்குடி விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் காலடி வைத்து தங்கள் அடுத்த கட்ட பணியை தொடங்கியுள்ளனர். அரிசி தேவைக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கலாம். ஆனால், விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடைய காய்கறிகளுக்கு அந்தந்த பகுதியையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் தேவையை தீர்த்து வருகின்றனர் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகோட்டை மற்றும் அரியக்குடி விவசாயிகள்.காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகோட்டையை மையமாக கொண்டு பெத்தாட்சிகுடியிருப்பு, பீர்க்கலைக்காடு, பனம்பட்டி, சிறுகப்பட்டி, மித்ராவயல், ஜெயங்கொண்டான், மித்ரங்குடி, ஆயினிமனை, ஆயினிபட்டி, புளியங்குடியிருப்பு, கமலை, புத்தன்பட்டி, விளாரிக்காடு உள்ளிட்ட சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை காலங்களில் நெல் விவசாயமும், மற்ற நேரங்களில் கத்தரி, வெண்டை, பீர்க்கு, அவரை, புடலை என தோட்டக்கலை விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் சேர்த்து அரியக்குடி, ஓ.சிறுவயல் விவசாயிகளும் காய்கறி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். குடும்பத்துடன் விவசாய பணிகளை மேற்கொள்வதால், இவர்களின் குடும்ப பாரத்தை இந்த காய்கறி விவசாயமே தீர்த்து வைக்கிறது.கத்தரிக்கு மவுசுஅரியக்குடி, பெரியகோட்டை கத்தரிக்கு காரைக்குடியில் தனி மவுசு உண்டு. மற்ற காய்கறிகளின் விலை ஏறி, இறங்கும் நிலையில் இப்பகுதி கத்தரி மட்டும் ஒரே விலையில் ஆண்டு முழுவதும் நீடிக்கும். இப்பகுதி விவசாயிகள் விதைகளை தாங்களே உற்பத்தி செய்து பெரும்பாலும் இயற்கை முறையிலான விவசாயத்தையே மேற்கொள்கின்றனர். தற்போது நெல் அறுவடை முடிந்த நிலையில் தோட்டக்கலை விவசாயத்தை ஆரம்பித்துள்ளனர்.உமா, பெத்தாட்சிகுடியிருப்பு: தை அறுவடை முடிந்து மாசியில் காய்கறி விவசாயத்தை தொடங்கி விடுவோம். பச்சை நிறமுடைய உருண்டு திரண்ட பெரிய கோட்டை கத்தரிக்கு எந்நாளும் மவுசு உண்டு. நன்றாக காய்த்தால் ஓராண்டு வரை பலன் கொடுக்கும். நாற்று நட்டு 60 முதல் 70 நாளில் காய்க்க தொடங்கும். இயற்கை முறையிலான உரங்களையே இடுவோம். கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதும் காலமெல்லாம் கத்தரி விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம். வெண்டையை பொறுத்தவரை 40 நாளில் காய்க்க தொடங்கும். ஒரு மாதம் மட்டுமே காய்ப்பு இருக்கும். மூன்று நாளைக்கு ஒரு முறை பறிக்க வேண்டும். பாகற்காய், புடலையும் அதே மாதிரிதான்.என்.நமச்சிவாயம், வீரசேகரபுரம்: கத்தரியை பொறுத்தவரை நெல் மாதிரியே நாற்றங்கால் அமைத்து கை நடவு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் கூட்டு விவசாயமே மேற்கொள்ளப்படுகிறது. ஒரு ஏக்கர் நெல்லுக்கு ஆகும் தண்ணீர் ஐந்து ஏக்கர் காய்கறி விவசாயத்துக்கு போதுமானது. முன்பெல்லாம் நெல் விவசாயம் மூலம் லாபம் பார்த்து வந்தோம். தற்போது வீட்டு உணவுக்கு கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் காய்கறி விவசாயம் மட்டுமே கை கொடுத்து வருகிறது. என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X