சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 140 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது: ஒருங்கிணைந்த கல்வி குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள், இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்தவும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டத்தில் 104 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், 36 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 140 பள்ளிகளுக்கு 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி சிவகங்கை ஒன்றியத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், 7 நடுநிலைப் பள்ளிகள், காளையார்கோவிலில் 8 தொடக்கப் பள்ளிகள், மானாமதுரை ஒன்றியத்தில் 10 தொடக்கப் பள்ளிகள், 2 நடுநிலைப் பள்ளிகள், திருப்புவனம் ஒன்றியத்தில் 14 தொடக்கப் பள்ளிகள், 7 நடுநிலைப் பள்ளிகள், இளையான்குடி ஒன்றியத்தில் 2 தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.அதேபோல் சாக்கோட்டை ஒன்றியத்தில் 16 தொடக்கப் பள்ளிகள், 6 நடுநிலைப் பள்ளிகள், திருப்புத்துார் ஒன்றியத்தில் 10 தொடக்கப் பள்ளிகள், 3 நடுநிலைப் பள்ளிகள், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 12 தொடக்கப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள், எஸ்.புதுார் ஒன்றியத்தில் 10 தொடக்கப் பள்ளிகள், 6 நடுநிலைப் பள்ளிகள், கல்லல் ஒன்றியத்தில் 4 தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டன.மேலும் விழாவிற்கு செலவு அதிகரித்தால் நன்கொடை பெறலாம். ஆண்டு விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோரை கட்டாயம் பங்கு பெற செய்ய வேண்டும், என்றார்.