புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் இன்று பார்லி. வளாகத்தில் திறக்கப்படுகிறது.
பா.ஜ.மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996 ,1998-99 மற்றும் 1999-2004-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் கடந்த 2018 ம்ஆண்டு ஆகஸ்டில் 93 வயதில் இறந்தார்.அவரை கவுரவிக்கும் விதமாக பார்லி. வளாகத்தில் வாஜ்பாய் உருப் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கினறனர்.