எட்டிப் பிடித்தோரை முட்டித் தள்ளிய காளைகள் : தவசிமடை ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எட்டிப் பிடித்தோரை முட்டித் தள்ளிய காளைகள் : தவசிமடை ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019
Advertisement
எட்டிப் பிடித்தோரை முட்டித் தள்ளிய காளைகள் :   தவசிமடை ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு

சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே தவசிமடையில் நடந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்றன. தவசிமடை அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., ஜீவா துவக்கி வைத்தார். முதலில் உள்ளூர், கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன.சுற்றுப் பகுதியை சேர்ந்த 405 வீரர்கள் காளைகளை அடக்கினர். அவர்களை காளைகள் முட்டி, மோதி, எட்டி, உதைத்து பறந்தன. சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர். கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் சிகிச்சையளித்தனர். அதிக காயமடைந்த நத்தம் மஞ்சநாயக்கன்பட்டி ராமு 38, பாலமேடு சந்திரன் 37, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X