சீரமைப்பு:20.5கி.மீ., மாநகராட்சி சாலைகள்..தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைப்பு:20.5கி.மீ., மாநகராட்சி சாலைகள்..தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 20.5 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது. இப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.திண்டுக்கல் மாநகராட்சியில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. மெயின் ரோடுகள் மட்டுமின்றி, குடியிருப்பு பகுதி ரோடுகளும் பள்ளங்கள் நிறைந்ததாக காணப்பட்டன. இரண்டு முதல் மூன்று அடி ஆழ பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் அவலம் தொடர்ந்தது.இதனால் நகர் பகுதிகளில் உள்ள ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கும்படி தமிழக அரசிடம் மாநகராட்சி நிர்வாகம் கோரியது. இதை ஏற்று அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.இந்நிதியின் மூலம் ஆர்.எம்.காலனி 6, 7 வது கிராஸ், நேருஜிநகர் கிராஸ், பாண்டியன் நகர், கிருஷ்ணா ராவுத்தர் தெரு, மவுன்ஸ்புரம், வடக்கு ரதவீதி, அண்ணாநகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, கோபால்நகர், லட்சுமி தெரு, பெரியகடை வீதி, கிழக்கு மரியநாதபுரம், சாஸ்திரி நகர், பர்மா காலனி உட்பட 23 சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில, 'தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர் பகுதியில் சீரமைக்கப்பட உள்ள சாலைகளின் மொத்த நீளம் 20.5 கி.மீ. மெயின் ரோடுகளில் தார் சாலையும், குடியிருப்பு பகுதிகளில் பேவர் கற்கள் மூலமும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. பணிகள் துவங்கி நடந்து வருகின்றன, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X