நெடுஞ்சாலையில் வழிப்பறியா வாட்ஸ் ஆப் தகவலால் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் வழிப்பறியா வாட்ஸ் ஆப் தகவலால் பரபரப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

வேடசந்துார்:வேடசந்துார் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் உள்ளதென பரவிய வாட்ஸ் ஆப் ஆடியோ தகவலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வேடசந்துார் நகர் பகுதியில் சில நாட்களாக ஒரு வாட்ஸ்ஆப்பில் ஆடியோ செய்தி வைரலானது. அதில் பேசியவர், 'திண்டுக்கல்லில் இருந்து சுரேஷ் பேசுகிறேன்' எனத் துவங்கி பேசினார்.சுங்கச்சாவடி முதல் திண்டுக்கல் வரை எங்கும் லாரியை நிறுத்தாதீர்கள். எனது நண்பர் சிவகுமார் சேலத்தில் இருந்து மதுரைக்கு லாரியில் வந்தார். வேடசந்துார் அருகே கல்வார்பட்டி கணவாய் மேட்டில், ஒரு கும்பல் லாரியை மறித்து கல்வீசியது. இரண்டு ஆண்டுக்கு முன் இதேபோல கும்பல் வழிப்பறி செய்தது. வேடசந்துாரில் இருந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கொள்ளை கும்பலை பிடித்து ஜெயிலில் அடைத்தார். ஒன்றரை வருடங்களாக ஜெயிலில் இருந்து வெளியே வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ஒரு வாரத்திற்குள் ஒரு கொலை செய்துள்ளனர். இரண்டு டிரைவர்களிடம் அடித்து பணம் பறித்துள்ளார்கள். எனவே தனியாக செல்லாமல், 2அல்லது 3 லாரிகளாக சேர்ந்து செல்லலாம், என்று அதில் பேசியவர் கூறியுள்ளார். இந்த தகவலால் வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, 'இது பழைய தகவலாக இருக்கும். இப்போது இது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X