'பிரதம மந்திரி கிசான் சம்மன்' நிதி திட்டத்தில் பயன்பெறலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிரதம மந்திரி கிசான் சம்மன்' நிதி திட்டத்தில் பயன்பெறலாம்

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டுக்கல்:'பிரதம மந்திரி கிசான் சம்மன்' நிதி திட்டத்தில் தகுதியான விவசாயிகள் பயன்பெறலாம், என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.மத்திய அரசு செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் நஞ்சை ஒரு எக்டேர் அல்லது புஞ்சை இரு எக்டேருக்கு மிகாமல் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது ஓராண்டில் மூன்று தவணையாக வழங்கப்படும். தகுதியான பயனாளிகளை கண்டறிந்து இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த விவசாயிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் இக்கணக்கெடுப்பு பணியில் வி.ஏ.ஓ.,க்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஈடுபடுவர். இவர்களிடம் தகுதியான விவசாயிகள், தங்களின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், ஆதார், வங்கி கணக்கு, அலைபேசி, ரேஷன்கார்டு எண், கணினி சிட்டா நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும். பிறகு கணக்கெடுப்பாளர்கள் தரும் சுயஉறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு பெற்று ஏற்கனவே பணியாற்றியவர்கள், தற்போது பணியாற்றுவர்கள், மத்திய மாநில அரசின் நிரந்தர பணியாளர்கள், மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக பெறுபவர்கள், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள், டாக்டர், வக்கீல், ஆடிட்டர், இன்ஜினியர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தகுதியான, சிறு, குறு விவசாயிகள், கணக்கெடுப்பு அலுவலர்கள் வரும்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X