ஓட்டு உறுதி செய்யும் கருவி பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு உறுதி செய்யும் கருவி பயிற்சி முகாம்

Added : பிப் 12, 2019
Advertisement

வேடசந்துார்:லோக்சபா தேர்தலில் நாம் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை நேடியாகவே பார்க்கும் வகையில், இயந்திரங்களை கொண்டு நேரடியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இந்திய தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சில கட்சிகள் பிரச்னையை கிளப்பிய நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவில் முறைகேட்டுக்கு வழியில்லை என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த இயந்திரத்தில் ஓட்டுக்களை யாருக்கு அளித்தோம் என்பதை அறியும் வகையில் புதிய அம்சமாக கருவி பொருத்தப்பட்டுள்ளது. அது வரும் லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்வதும் அவசியம்.எனவே இதற்கென பயிற்சி முகாமை தேர்தல் கமிஷன் நடத்த அறிவுறுத்தியுள்ளது. வேடசந்துார் தாலுகாவில் உள்ள 307 வாக்குச்சாவடிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 223 வாக்குச்சாவடிகளில் இந்த பயிற்சி முகாம் பிப்.,14 வரை நடக்க உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை வேடசந்துார் தாசில்தாரகள்் சுரேஷ்கண்ணன், பாண்டியராஜன் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X