கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சைமலையான் கோட்டையை சேர்ந்தவர் தங்கவேல் 65. நேற்று குடும்பத்தினருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினர். பிறகு அவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.அதில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது: செம்பட்டி-பழநி ரோட்டில் கடந்த 2003 ம் ஆண்டு நிலம் வாங்கினேன். தற்போது பக்கத்தில் இருப்பவர் அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் கேட்டார். கொடுக்க மறுத்ததால் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுடன் சேர்ந்து என் மீது வழக்கு பதிவதாக மிரட்டல் விடுக்கிறார். என் நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X