சிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (142)
Advertisement
சிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி

புதுடில்லி,:'மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில், சிறுபான்மையினர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டும்' என, டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான, அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் முறையிடும்படி, உச்ச நீதிமன்றம் கூறியது.







புதிய மனு

இந்நிலையில், அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், அவர் கூறியுள்ளதாவது:கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், ஹிந்துக்கள், சிறுபான்மையினராக உள்ளனர்.ஆனால், சிறுபான்மையினர் பிரிவில், ஹிந்துக்கள் இல்லாததால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், சிறுபான்மையினருக்கான வசதிகளை, ஹிந்துக்கள் பெற முடியவில்லை.சிறுபான்மையினர் குறித்து தேசிய அளவில் கணக்கெடுக்காமல், மாநிலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்காக, சிறுபான்மையினர் குறித்த விளக்கத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.


உத்தரவு

மேலும் சிறுபான்மையினருக்கான அந்தஸ்தை நிர்ணயிக்க வழிமுறைகளில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும் படி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
13-பிப்-201908:22:39 IST Report Abuse
ரத்தினம் நாதிர்ஷாவும் கஜினியும் பாபரும் அலாவுதீன் கில்ஜியும் தான் இந்த நாட்டு மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள் தான் உண்மையிலேயே இந்நாட்டு குடி மக்கள். மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:21:02 IST Report Abuse
meenakshisundaram உண்மையிலேயே பிராமணர்கள் தான் சிறுபான்மையினர் .இதை எல்லா புள்ளி விபரங்களும் கூறும். விரைவில் நீதிமன்றங்கள் அவர்களை சிறுபான்மையினராக அறிவித்து எல்லா விதமான ஒதுக்கீடுகளை கல்லூரிகளிலும் சலுகைகளில் பதவி உயர்வு செய்யவும் வேண்டும். மிக அவசியமான நடவடிக்கை.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-பிப்-201913:27:30 IST Report Abuse
Sathya Dhara மிக அருமையான பதிவு.......விஞ்ஞானபூர்வமான உண்மையும் கூட.......மதுரை மீனாக்ஷி அம்மனும் சொக்கநாதரும் சேர்ந்துதான் மீனாட்சிசுந்தரம் என்ற பெயரில். இவ்வளவு செறிவான கருத்து நிறைந்த.... சாத்தியமான ..சத்யமான..ஒரு உண்மைதனை புட்டு புட்டி வைத்துள்ளனர். விரைவில் மிக விரைவில் பிராமணர்கள் அனைவரும் சிறுபான்மை என்று உடனே அறிவிக்கப்பட வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-பிப்-201920:25:06 IST Report Abuse
மலரின் மகள் சிறுபான்மை என்ற சொல் நீக்கப்படவேண்டும். அரசு அனைவருக்கும் பொதுவானதாக மாறியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் கடந்து விட்டன சுதந்திரம் பெற்று. இன்னமும் என்ன சலுகைகள். அறிவிற்கும் திறமைக்கும் தடை கூடாது. ஏழைகளுக்கு உணவிற்கும் உடைக்கும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இலவச வசதிகள் செய்து கொடுக்கட்டும், அதை சிறுபான்மை என்று கொள்ளக்கூடாது.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-பிப்-201913:31:44 IST Report Abuse
Sathya Dhara மலரின் மகள்......பாராட்டுக்கள். விளாசி விட்டீர்கள் இரண்டே வரிகளில்.....நேரு காந்தி இந்த இரண்டு மனிதர்களை மட்டுமே மூலதனமாக கொண்டு மக்களை எழுபது காண்டுகாலமாக தொடர்ந்து ஏமாற்றிய.....கான் கிராஸின் சதி .....சிறுபான்மை மக்களை மட்டுமே ....வைத்து ஒட்டு வங்கியை பிரித்து.....இந்த நாட்டின் பெருமைக்குரிய பெரும்பான்மை மக்களை ஏமாற்றி ...ஐயோ ஐயோ அயோ எவ்வளவு கொடுமைகள் புரிந்துள்ளனர். உருப்படுமா இந்த கான்கிராஸ் கும்பல்......தூக்கி எறியப்பட வேண்டும் இந்த ......விஞ்ஞானபூர்வமான வந்தேறிக்கும்பல்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X