பொம்மலாட்டம் குறித்து வெளிநாட்டினர் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொம்மலாட்டம் குறித்து வெளிநாட்டினர் பயிற்சி

Added : பிப் 12, 2019
Advertisement

வேடசந்துார்:தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, பொம்மலாட்டம் மூலம் எளிய முறையில் வெளி நாட்டினர் பயிற்சி அளித்தனர்.வேடசந்துார் அமைதி அறக்கட்டளை சார்பில், அம்மாபட்டி ஆர்.சி., தொடக்கப்பள்ளியில் கல்வி, எழுத்தறிவு குறித்த பொம்மலாட்ட பயிற்சி முகாம் நடந்தது. அமைதி அறக்கட்டளை் தலைவர் பால்பாஸ்கர் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை புஸ்பா முன்னிலை வகித்தார். சமுதாய வளமைய தன்னார்வலர் ரேணுகாதேவி வரவேற்றார்.ஜெர்மனியை சேர்ந்த பொம்மலாட்ட ஆசிரியர் ஜெர்டு, தொண்டு நிறுவன தன்னார்வலர் ஹெலன் உல்ரிக் கலந்துகொண்டு, பொம்மலாட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான கல்வி, எழுத்தறிவு, கூர்மை சிந்தனை அதிகரிப்பது குறித்து விளக்கப்பட்டது. முகாமில் அமைதி அறக்கட்டளையின் திட்ட மேலாளர் சீனிவாசன், கள ஒருங்கிணைப்பாளர்கள் பவித்ரா, கோகிலா, நதியா, புவனா, முனியாண்டி, நாகலட்சுமி, தன்னார்வலர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X