பயனாளிகள் தேர்வில் நீடிக்கும் நடைமுறை சிக்கல்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகள் தேர்வில் நீடிக்கும் நடைமுறை சிக்கல்கள்

Added : பிப் 12, 2019
Advertisement

கொடைரோடு:விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்ட பயனாளிகள் தேர்வில், புயல் நிவாரணத்தைப் போன்றே நடைமுறைச் சிக்கல்கள் தொடர்வதால் வருவாய்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பிப். 10ல் பயனாளிகள் தேர்வு துவங்குவதாக அறிவித்தபோதும், முன்னதாகவே ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் மூலம் உரிய பயனாளிகள் இறுதி செய்து, பிப். 15க்குள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.கஜா புயல் நிவாரண வழங்குவதில் நீடித்த நடைமுறைச் சிக்கல்கள், தற்போதும் உள்ளதாக வருவாய் துறையினர் புலம்புகின்றனர். அவர்கள் கூறுகையில், ''நில அளவு, பயனாளர்களில் தனிநபர், கூட்டுக்குடும்ப விண்ணப்பதாரர்கள் நிலம் வைத்திருப்பர். 2015--16ம் ஆண்டின் வேளாண்மை கணக்கெடுப்பு அடிப்படையில், அரசு இத்திட்டத்திற்கு தயாராகி உள்ளது. மூதாதையர் பெயரில் பட்டா, சிட்டா வைத்திருப்போர், நில உரிமைதாரர், குத்தகைதாரர்களில் எந்த அடிப்படையில், யாருக்கு தகுதி என்ற விபரம் இல்லை. விண்ணப்பங்களை வாங்குங்கள், பின்னர் வரும் தகவல்களுக்கேற்ப செயல்படுங்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கஜா புயல் நிவாரணத்தைப் போன்றே, தற்போது நடைமுறை சிக்கல்கள் உள்ளன, என்றனர்.குழப்பத்தில் வருவாய் அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X