பயன்பாட்டுக்கு வந்ததுபுழுதி அகற்றும் வாகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வந்ததுபுழுதி அகற்றும் வாகனம்

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சாலை புழுதியை அகற்றும் நவீன வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் புழுதி பறக்காத சாலைகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு புழுதி தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகா குழுமத்தின் உதவியுடன் ரூ.67 லட்சத்தில் சாலையை சுத்தப்படுத்தும் வாகனம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது திண்டிமா வன குழுவினரால் பராமரிக்கப்பட உள்ளது. இவ்வாகனத்தின் பயன்பாட்டை அமைச்சர் சீனிவாசன் துவக்கிவைத்தார்.அவர் பேசுகையில், 'அனைத்து வகை சாலைகளையும் சுத்தம் செய்யும் வல்லமை இவ்வாகனத்துக்கு உண்டு. ஐந்து மணி நேரத்தில் 10 கி.மீ., ரோட்டை சுத்தம் செய்யும். அப்போது புழுதி பறக்காமல் இருக்க, நீர் தெளிக்கும் வசதியும் உள்ளது. புழுதியை சேகரிக்கும் வசதியும் இருக்கிறது' என்றார். முன்னாள் மேயர் மருதராஜ், கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X