குவியும் குப்பையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குவியும் குப்பையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement
 குவியும் குப்பையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

ஆண்டிபட்டி:வைகை அணை பெரிய பாலத்தின் அடியில் குவியும் குப்பையால் 'பிக்கப்' அணையில் உள்ள குடிநீர் ஆதாரம் பாதிப்படைகிறது. இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்க பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைகை அணையில் இருந்து பாசனம், குடிநீருக்காக திறக்கப்படும் நீர் பெரிய பாலம் வழியாக' பிக்கப் 'அணையில் சேர்கிறது. பின்னர் இங்கிருந்து ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும் பாசனம் மற்றும் குடிநீருக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. வைகை அணை பெரிய பாலத்தின் அடியில் பல்வேறு சடங்குகள் செய்பவர்கள், கோயில், வீடுகளில் பூஜைக்குப்பின் குவியும் குப்பை மொத்தமாக சேர்த்து வைத்து ஆற்றில் கொட்டுகின்றனர். இந்த குப்பை பிக்கப் அணையில் தேங்கியுள்ள நீருடன் கலந்து விடுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை, சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தும் கெமிக்கல் பொருட்களால் தண்ணீர் தன்மை பாதிப்படைந்துள்ளது.இந்த நீரில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி -- சேடபட்டி, தேனி நகராட்சி, ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைக்கு எடுக்கப்படுகிறது. அதில் கழிவுகள், குப்பை கலப்பதால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கவும், இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்க பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X