போதிய விளைச்சல், விலை இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போதிய விளைச்சல், விலை இல்லை

Added : பிப் 12, 2019
Advertisement
 போதிய விளைச்சல், விலை இல்லை

கவலையில் கானப்பயிர் விவசாயிகள்
போடி:போடியில் கருப்பு கானத்திற்கு கடந்த ஆண்டைவிட விளைச்சல் மட்டுமின்றி விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கானப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ரசம், சட்னி என உணவுப்பொருட்களில் சத்து, மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது.விதைத்து ஐந்து மாதத்தில் அறுவடை துவங்கிவிடும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன். மற்ற மாதங்களில் சிலர் பயிரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் கானம் பயிரிட்டவர்களுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அதன் பின் விதைப்பு செய்தவர்களுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் போய்விட்டது.கடந்த ஆண்டு நல்ல மழை இருந்ததால் விளைச்சல் அதிகரித்ததோடு நல்ல விலையும் இருந்தது. சீசன் துவக்கத்தில் குவிண்டால் (100 கிலோ) ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரத்தி 200 வரை விலை இருந்தது. இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் குவிண்டால் ரூ. 3 ஆயிரத்தி 500 முதல் ரூ.3 ஆயிரத்தி 700 வரை விலை இருந்தது. தற்போது குவிண்டால் ரூ. 3 ஆயிரத்தி 900 வரை விலை போகிறது. கடந்த ஆண்டை விட போதிய விளைச்சல், விலை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X