மாவட்டத்தில் கோடைக்கு முன்னரேகுறைந்துவரும் பால் உற்பத்தி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கோடைக்கு முன்னரேகுறைந்துவரும் பால் உற்பத்தி

Added : பிப் 12, 2019
Advertisement

வறட்சி, காணை நோய் தாக்குதலால் பாதிப்பு
கம்பம்:மாவட்டத்தில் வறட்சி, கால்நடைகளுக்கு காணை நோய் தாக்குதலால் இந்தாண்டு கோடைகாலம் துவங்கும்முன்னரே பால் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.தேனி வேளாண் தொழில்சார்ந்த மாவட்டமாகும். பசுமாடு மற்றும் எருமை வளர்ப்பு,ஆடு வளர்ப்பு தொழில்களும், விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது.லட்சக்கணக்ான லிட்டர் பால் உற்பத்தியாகிறது.கேரளாவிற்கு மட்டும் தினமும் குறைந்தது 2 லட்சம்லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினமும்ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய குறியீடு நிர்ணயித்து செயல்படுகிறது. வருஷநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் தான் அதிக பால் உற்பத்தியாகிறது.பொதுவாக கோடையில் பால் உற்பத்தி குறையும். ஆனால் இந்தாண்டு கோடை துவங்கும் முன்பேதற்போது குறையத் துவங்கியுள்ளது.கடும் வறட்சி, பசும் தீவனங்கள் கிடைக்காத நிலை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், கால்நடைகளுக்கு காணை நோய்தாக்குதல் பால் உற்பத்தியை பாதித்து விட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறோம். எனினும்கடும் வறட்சி நிலவுவதால், பால் உற்பத்தி குறைவை தடுப்பது சவாலான விஷயமாகும் என்றனர்.ஆவின் நிறுவனத்திற்கு தினமும் கொள்முதல் குறியீட்டிலிருந்து 6 ஆயிரம் லிட்டர் குறைவாக கிடைக்கிறது.பிற நிறுவனங்களும், பால் உற்பத்தி குறைவால் திணறி வருகிறது. இதனை அதிகரிக்க ஆலோசனை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X