எச்.ஐ.வி., நடமாடும் விழிப்புணர்வு ஊர்தி: கலெக்டர் துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., நடமாடும் விழிப்புணர்வு ஊர்தி: கலெக்டர் துவக்கி வைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement
 எச்.ஐ.வி., நடமாடும் விழிப்புணர்வு ஊர்தி: கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார்:காசநோய் மற்றும் எச்.ஐ.வி., நடமாடும் விழிப்புணர்வு ஊர்தியினை, கலெக்டர் அன்புச்செல்வன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முதல் 6 நாட்கள் நடமாடும் விழிப்புணர்வு ஊர்தியினை பயன்படுத்தி, எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு மற்றும் ரத்த பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் காசநோய் தடுப்பு வாகனம் மற்றும் எச்.ஐ.வி., விழிப்புணர்வு வாகனமும் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழிப்புணர்வு ஊர்தியினை கலெக்டர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்து பேசுகையில், 'கிராமப்புறங்களில் வாழும் மக்கள் (குவாரிகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், நெடுந்துார வாகன ஓட்டுனர்கள், இடம் பெயர்ந்தவர்கள்) பயனடையும் நோக்கோடு இத்திட்டம் செயல்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் 2018ம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்ட 3,373 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல், இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை காசநோயின் அறிகுறிகள். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காசநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.இந்த விழிப்புணர்வு வாகனம், அன்னவல்லி, காரைக்காடு, வெங்கடாம்பேட்டை, பாலக்கொல்லை, சி.கீரனுார் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் முகாம் நடத்துகிறது. நிகழ்ச்சியில் துணை இயக்குனர் கலா, காசநோய் துணை இயக்குனர் கருணாகரன், அன்புச்செல்வி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X