சிதம்பரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை

Added : பிப் 12, 2019
Advertisement
 சிதம்பரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை

சிதம்பரம்:சிதம்பரத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தென்னக ரயில்வே பொதுமேலாளர் குல்சிதா தெரிவித்தார்.தென்னக ரயில்வே பொதுமேலாளர் குல்சிதா, திருவாரூர், மயிலாடுத்துறை, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் வருடாந்திர ஆய்வை நேற்று மேற்கொண்டார். சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு மதியம்1.30 மணிக்கு வந்த அவர், ரயில்வே சிக்னல், தொலைபேசி போன்ற கட்டுப்பாடு அறையை திறந்து வைத்தார்.பின்னர் சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.ரயில் நிலைய வளாகம் நுழைவாயில் அருகில், ரூ. 67 லட்சம் ரூபாய் மதிப்பில் ரயில்வே உயர் அதிகாரிகள் தங்குவதற்கான, நவீன முறையில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கெஸ்ட் ஹவுசை திறந்து வைத்தார்.தொடர்ந்து திருச்சி கோட்ட ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரி கந்தசாமி எழுதிய, கேட் கீப்பர், லைன் மேன்களுக்கான ரயில் பாதுகாப்பு குறித்த வழிக்காட்டி புத்தகத்தை பொதுமேலாளர் குல்சிதா வெளியிட்டார். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.பின்னர் நிருபர்களிடம் குல்சிதா கூறுகையில், 'சிதம்பரம் நகர் ஆன்மிக தொன்மை வாய்ந்த நகரம். சிதம்பரத்தில் அந்தோதியா ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்லும். மயிலாடுத்துறை-விழுப்புரம், மயிலாடுத்துறை-தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் வேகத்தை 90 கி.மீ., வேகத்தில் இருந்து 100 கி.மீ வேகமாக உயர்த்தப்பட்டுள்ளது' என்றார்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயக்குமார் ரெட்டி, கூடுதல் மேலாளர் ஹரிஷ், கோட்ட இன்ஜினியர் பன்னீர்செல்வம், இன்ஜினியர்கள் பிரசன்னா, ஜெயராஜி, வணிக மேலாளர் நரேன், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மேலாளர் மகேந்திரன், கந்தசாமி, சிதம்பரம் ரயில் நிலைய அதிகாரி கனகராஜ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X