பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் நேர காப்பக அலுவலகம் முற்றுகை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் நேர காப்பக அலுவலகம் முற்றுகை

Added : பிப் 12, 2019
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ், பஸ் நிலையத்திற்கு வராமல் சென்றதால் முன் பதிவு செய்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.பண்ருட்டியில் இருந்து அரசு போக்குவரத்து கழக 149 தடம் எண் பஸ், தினந்தோறும் காலை 5:10 மணிக்கு புறப்பட்டு,சென்னை செல்லும். இந்த பஸ்சில் செல்வதற்கு இரு நாட்கள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உண்டு.இந்நிலையில், நேற்று காலை, இந்த பஸ்சில் பயணம் செய்வதற்காக சென்னையில் அரசு அலுவலகம்,கல்லுாரி மாணவர்கள் என பலர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் நேற்று பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் காலை 6:00 மணி வரை பஸ் வரவில்லை. இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். பயணிகள் பஸ் வராதது குறித்து விசாரித்த போது, பஸ் டிப்போவில் இருந்துபுறப்பட்டு நான்கு முனை சந்திப்பு வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டது தெரிந்தது.இதனால் ஏமாற்றமடைந்த பயணிகள், பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள நேர காப்பக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் பயணிகள் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X