பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டி

Added : பிப் 12, 2019
Advertisement
 பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டி

பெண்ணாடம்:தாழநல்லுாரில் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ள, பாரம்பரிய நெல் ரக மாநில விளைச்சல் போட்டியில், பங்கேற்ற நெல் வயலை, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் வகையிலும், சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த, பாரம்பரிய நெல் ரக மாநில விளைச்சல் போட்டியை தமிழக அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வெற்றி பெறும் விவசாயிகளுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் விருதும், முதல் பரிசு 1 லட்சம்; 2 வது பரிசு 75 ஆயிரம்; 3 வது பரிசு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரை சேர்ந்த செந்தமிழ் மரபு வழி வேளாண் மைய நிர்வாகி கவியரசன், 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில், மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை சாகுபடி செய்திருந்தார். இதனை பயிர் விளைச்சல் போட்டிக்கு பெண்ணாடம் வேளாண் விரிவாக்க மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் வயல்களை, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, ஆய்வு செய்து அதன் மகசூல் மற்றும் பயிர்களின் வளர்ச்சி விபரங்களை சேகரித்தார். அவர் முன்னிலையில், இயந்திரம் மூலம் அறுவடைப்பணி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் (மத்தியத் திட்டம்) வேல்விழி, வேளாண் உதவி இயக்குனர் கீதா, கரூர் மாவட்ட வேளாண் அலுவலர் சந்தனதுரை, உதவி வேளாண் அலுவலர்கள் அறிவழகன், கவிதா, சித்ராங்கி, செந்தமிழ் மரபு வழி வேளாண் மைய நிர்வாகிகள் முருகன், கனகசபை, விவசாய பிரதிநிதி குமரகுரு, விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X