'ஆமை ' வேகத்தில் வடிகால் பணி:| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆமை ' வேகத்தில் வடிகால் பணி:

Added : பிப் 12, 2019
Advertisement

மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் கடை வீதியில் ஆமை வேகத்தில் நடக்கும் வடிகால் பணியை விரைவு படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் முதல், ரோமாபுரி வரை 5 கி.மீ., துாரத்திற்கு வடிகால் வசதியுடன் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, சாலை பணி முடிந்து தற்போது வடிகால் அமைக்கும் பணி பாதியளவு மட்டுமே முடிந்துள்ளது.தற்போது கடை வீதியில் வடிகால் அமைக்கும் பணிக்காக கடை முன் பள்ளம் தோண்டி மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து வருவதால், சாலை குறுகலாகி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து நெய்வேலி அனைத்து வணிகர் சங்க பேரவை செயலர் பாபு கூறுகையில் 'சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆறு அடி பள்ளம் தோண்டி இருப்பதால், பொதுமக்கள் கடைக்கு வரும் போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X