விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம்

Added : பிப் 12, 2019
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரே உள்ள நந்தவனம், திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிர்புறம், மணிமுக்தாற்றங்கரையை ஒட்டி, நந்தவனம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாலக்கரை ரவுண்டானா, கடைவீதி நான்குமுனை சந்திப்புகளில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும்போது, தொண்டர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நந்தவனத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாசிமக திருவிழாவிற்கு வந்திருந்த அப்போதைய கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி., ராதிகா ஆகியோர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக நந்தவனம் பகுதியில் கார் ஸ்டேண்ட் அமைத்து, மீதமுள்ள பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அவர்கள் பணி மாறுதலாகிச் சென்றதும், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இதனால், நந்தவனம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள நந்தவனத்தில் பூங்கா அமைக்க அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X