பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த மருங்கூர் கொள்ளுக்காரன் குட்டையில் வி.எம்.கேஷ்யூஸ் என்ற முந்திரி ஏற்றுமதி நிறுவன திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.வி.எம்.கேஷ்யூஸ் முந்திரி ஏற்றுமதி நிர்வாக இயக்குனர் மருங்கூர் வீரவிஸ்வாமித்திரன்---சண்முகபிரியா வரவேற்றனர். அவரது மகள் உத்ரா விஸ்வாமித்திரன் புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார்.விழாவில் தமிழ்நாடு சிறு மற்றும்குறு தொழில்துறைசெயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் , டெல்லி மாநகர காவலர் குறைதீர்மைய ஆணையர் காமராஜ், டி.ஜி.பி., ஜாபர் சேட் , போலீஸ் அகாடமி தலைவர் பாஸ்கர், த.நா.கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைஇயக்குனர் டாக்டர் ராமேஸ்வர முருகன், முன்னாள் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன், என்.எல்.சி., மனிதவள தலைமை பொது மேலாளர் மோகன், எம்.பி., விஜயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சபா.ராஜேந்திரன்,பார்த்திபன் கலந்து கொண்டனர்.மேலும், தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ரமேஷ்,செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பரமணியன், சிவக்கொழுந்து, தி.மு.க., தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காடாம்புலியூர் தேவநாதன், அரியலுர் எஸ்.எஸ். சங்கர் அனுஸ் டைல்ஸ் நிர்வாக இயக்குனர் குமார், இன்ஜினியர் வைத்தீஸ்வரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க., மாவட்ட பேரவை செயலாளர் பக்தரட்சகன், விஷ்ணு கேஷ்யூஸ் முருகவேல் கலந்து கொண்டனர்.