சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை : வேளாண் அலுவலர்கள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை : வேளாண் அலுவலர்கள் தீவிரம்

Added : பிப் 12, 2019
Advertisement

விருத்தாசலம்:மத்திய பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயை மார்ச்சுக்குள் வழங்க வேளாண் துறை மூலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், நாடு முழுவதும் 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகள் 12 கோடி பேருக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, முனைப்புடன் செயல்படுத்த மத்திய வேளாண் துறை மூலம் அனைத்து மாநில வேளாண் துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.இதில், சிறு விவசாயிகளுக்கு மட்டும்; முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டம், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம், சிறு விவசாயிகளின் தகுதிகளை உறுதி செய்து பட்டியலை தயார் செய்ததும், அத்துடன் பயனாளிகளின் ஆதார், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து அனுப்பப்பட உள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள 2.2 லட்சம் சிறு விவசாயிகளில் இறுதிப் பட்டியலை தயார் செய்யும் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர் என, வேளாண் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X