மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு வாகனம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

Added : பிப் 12, 2019
Advertisement

கடலுார்:கடலுார் டவுன்ஹாலில் எதிரில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகன துவக்க நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அன்புசெல்வன், விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார். அப்போது , அவர் கூறுகையில்,'லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக தேர்தல் விழிப்புணர்வு வாகனம் துவங்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.நாளை 13ம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு வாகனம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தி, மாதிரி ஓட்டுப்பதிவு ஒத்திகை நடத்தப் படுகிறது.லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில் சப் கலெக்டர் சரயூ, தாசில்தார்கள் பாலமுருகன், சத்தியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X