பிச்சாவரம் சுரபுண்ணை காடுகளில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சாவரம் சுரபுண்ணை காடுகளில்

Added : பிப் 12, 2019
Advertisement

சிதம்பரம்:பிச்சாவரம் சுரபுண்ணை காடுகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி் நடந்தது.தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த இரு நாட்கள் நடந்தது. கடலுார் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், பிச்சாவரம் சுரபுண்ணை காட்டிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. பிச்சாவரத்தில் வன சரக அலுவர்கள் வெங்கடேசன் தலைமையில், பறவையியல் வல்லுனர் முனைவர் சம்பத் நேரடி கண்காணிப்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.வனவர் ஞானசெல்வி, வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஆறுமுகம், சங்கர், காவலர்கள் ராஜாராம், ரமேஷ் ஆகியோர் பறவைகள் ஆய்வாளர் சம்பத்துடன் பிச்சாவரம் காட்டில் படகுகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பிச்சாவரம் காட்டில் 1000க்கும் மேற்பட்ட பறவைகள் இனம் கணக்கிடப்பட்டுள்ளது. 10 வெளிநாட்டு பறவைகள் உட்பட நத்தைகுத்தி நாரை, பைடு கிங்பிஷ்ஷர், மணிப்புறா, நீர்காகம், கரண்டி வாயன், பருந்து, குருவி வகைகள் என பல்வேறு வகையான பறவைகள் தங்கியுள்ளது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X