இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு

Added : பிப் 12, 2019
Advertisement

விருத்தாசலம்:திட்டக்குடி அருந்ததியர் மக்கள், இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, சப் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.திட்டக்குடி தர்மகுடிக்காடு பகுதி, இந்து அருந்ததியர் மக்கள் சார்பில் சப் கலெக்டர் பிரசாந்திடம் கொடுதுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தர்மகுடிக்காடு பகுதியில் 70 குடும்பங்கள், 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதுவரை மாற்று இடம் இல்லாமல், குறுகிய இடத்தில் வாழ்கிறோம். திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 1997ல் சர்வே எண் 218ல் இவலச வீட்டு மனைப்பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், தனிநபர்கள் அந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, 150 ஆண்டுகளாக மாற்று இடமில்லாமல் வசித்து வரும் எங்களுக்கு அந்த இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X