ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு பயிற்சி

Added : பிப் 12, 2019
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி மற்றும் வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வி.இ.டி., கல்விக்குழும செயலர் ராஜ்குமார் வரவேற்றார்.கல்வி அலுவலர் ரத்தினசெல்வி, தாளாளர் செல்வராஜ், துணை தலைவர் ஜோதி, தனபால், வட்டார கல்வி அலுவலர் மேத்யூ, பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், தன்னார்வ ரத்ததான இயக்க ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, ரெட்கிராஸ் கொடியேற்றி முகாமை துவக்கி வைத்தார்.இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியன், ரெட்கிராஸ் தலைவர் பாலதண்டாயுதம், டாக்டர் லாவண்யா வாழ்த்திப் பேசினர்.மாநில பயிற்றுனர்கள் சின்னப்பன், தண்டபாணி, யோகா பயிற்றுநர் ஆனந்தமூர்த்தி, கலைக்குழு பயிற்சியாளர்கள் சின்னப்பராஜ், ஆல்பர்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.பயிற்சியில் பங்கேற்ற மற்றும் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். முகாமில், விழுப்புரம், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டங்களை சேர்ந்த 100 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X