குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக வாய்ப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை:குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியான இரு உறுப்பினர் பணியிடங்களுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான சமூக பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் நடராஜன் கூறியதாவது: மதிப்பூதியம் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர். குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர். குழந்தை உளவியல், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.35 வயதிற்கு குறையாதவராக, 65 வயதை பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும். ஒருவர் ஒரு குழுவில் அதிகபட்சம் இரு முறை மட்டுமே பதவி வகிக்கலாம். தொடர்ந்து பதவி வகிக்க இயலாது.விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்று 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிளாட் எண் 91, 94, அசோக்நகர் 3வது தெரு, மதுரை 625 018. போன்: 0452- - 264 2300. தகுதி, அனுபவ அடிப்படையில் நியமனம் அமையும். அரசு முடிவு இறுதியானது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X