மாணவர்களுக்கு பாராட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : பிப் 12, 2019
Advertisement

மூங்கில்துறைப்பட்டு:மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தாகத்தீர்த்தபுரத்தில் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம் நடந்தது. இதில் 66 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இம்முகாமில், பங்கேற்ற மூங்கில்துறைப்பட்டு கே.சி.எஸ்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தீயணைப்பு மற்றும் தீ மீட்பு பணி பயிற்சி, யோகா, அக்குபஞ்சர், ஜே.ஆர்.சி., வரலாறு, சாலை விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகிய பயிற்சிகளில் சிறப்பாக செய்து காட்டியதற்காக, கே.சி.எஸ்.எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர் ஜெராடின் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர் டெய்சி முன்னிலை வகித்தனர். ஜே.ஆர்.சி., ஆசிரியர் சந்திரலேகா வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X