திண்டிவனத்தில் தர்பூசணி விற்பனை அமோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் தர்பூசணி விற்பனை அமோகம்

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டிவனம்:கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், திண்டிவனத்தில் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தைத் தணிக்க பொதுமக்கள் பழங்கள், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட நீர் சத்துக்கள் உடைய பழங்களைத் தேடி உட்கொண்டு வருகின்றனர்.இதில், உடல் சூட்டைத் தணிக்கும் தர்பூசணியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.தமிழகத்திலேயே திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளிலிருந்து விளையும் தர்பூசணி ருசியாக இருப்பதால், வெளிமார்க்கெட்டில் திண்டிவனம் தர்பூசணிக்கு நல்ல விலை கிடைக்கின்றது. இதனால் இந்த ஆண்டு திண்டிவனம் தாலுகாவில் மட்டும் 4000 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் பயிரிடப்படடுள்ள தர்பூசணி, பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது தர்பூசணி அதிக அளவில் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. ஒரு டன் தர்பூசணி 4000 ரூபாயிலிருந்து தரத்திற்கேற்ப 8000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி, சந்தைமேடு உள்ளிட்ட பல இடங்களில் தர்பூசணி கிலோ 10 ரூபாய்க்கு சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X