இயற்கையுடன் பசுமை பேசும் பாமயன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கையுடன் பசுமை பேசும் பாமயன்

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரையில் ரேடியோ சிட்டியின் 'மதுரை சிட்டிசன்' விழாவில் 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தினமலர் ஊடக உதவி வழங்க, யங் இந்தியன்ஸ் அமைப்பு இணைந்து வழங்கியது. விருது பெற்றவர்கள் தினமும் இங்கே அனுபவங்களையும், சாதனைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது பெற்ற பாமயன், விவசாயி மட்டுமல்ல இயற்கை விவசாய பயிற்சிகளையும் அளிக்கிறார். 1988-89ல் பத்திரிகை துறையில் இருந்த போது பகுதி நேர இயற்கை விவசாயம் செய்யதவர், 1998க்கு பின் முழுநேர இயற்கை விவசாயியாக மாறினார்.பாமயன் கூறியதாவது: இயற்கை விவசாயத்திற்கு வந்த பின் 'தமிழக உழவர் தொழில்நுட்ப கழகம்', விவசாயிகளுக்காக 'தாளான்மை' இயக்கம் துவங்கினேன். கெமிக்கல் விவசாய மருந்துகளுக்கு மாற்றாக தேமோர் கரைசல், முட்டை அமினோ அமிலம், திரமி நுண்ணுயிர் கரைசல், பழக்காடி உட்பட 20 இயற்கை மருந்துகளை கண்டறிந்தேன். இதை பல மாவட்ட விவசாயிகள் யன்படுத்துகிறார்கள். மாவட்டம் கழக அலுவலர்கள் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார்கள். தமிழகத்தில் முதன் முதலில் சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மதிப்புக் கூட்டு பொருட்கள் செய்யும் கூடமும் ஆரம்பித்தேன்.காகம் மரக்கிளைக்கு வெளியே கூடு கட்டினால் மழை இருக்காது, கிளைக்கு உள்ளே கட்டினால் மழை இருக்கும். ஆண் துாக்கணாங்குருவி தான் கூடு கட்டும். அப்படி கட்டும் போது பெண் குருவி எத்தனை முட்டையிடும் என்று முன்பே தீர்மானித்து அதற்குரிய அறையை கூட்டுக்குள் கட்டும். இன்றைய இளம்தலை முறையினர் இயற்கையின் இந்த அதிசயங்களை அறிந்து பாதுகாக்க வேண்டும். இவ்விருது இயற்கைக்கு கிடைத்த விருதாக நினைக்கிறேன், என்றார்.இவரை வாழ்த்த 98420 48317

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X