கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது

Added : பிப் 12, 2019
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் புதிய தாக வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால் மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, ஊராட்சி மற்றும் வருவாய் துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தினமும் வந்து செல்வது வழக்கம். கோடை காலம் நெருங்குவதையொட்டி, மக்களின் குடிநீர் பிரச்னைக்காக கலெக்டர் அலுவலகம் கீழ் தளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான இயந்திரத்தை கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணி துவங்கிய சில தினங்களிலே பழுது ஏற்பட்டு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வராததால் கலெக்டர் அலுவலகம் வருவோர் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். மக்களின் தாகத்தைத் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட இயந்திரத்தை பழுதுநீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X