தெற்கு ரயில்வே பொது மேலாளர் ரயில் நிலையங்களில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ரயில் நிலையங்களில் ஆய்வு

Added : பிப் 12, 2019
Advertisement

விழுப்புரம்:திருவாரூரில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வரை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.திருவாரூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரீஸ்தா, நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாலை 5:40 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருவாரூரில் இருந்து விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரயில்வே கேட் ஆகியவற்றின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரத்தில் சுரங்க நடைபாதை மற்றும் வாகன பார்க்கிங் வசதியை சரி செய்ய வேண்டும் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் நேரத்தை பழைய கால நேரப்படி இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.எம்., உதயகுமார்ரெட்டி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X