சந்தைமேடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்தைமேடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

Added : பிப் 12, 2019
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் நடைபாதை கடைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட சந்தைமேடு பகுதியில், அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மற்றும் நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 11ம் தேதி ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதற்கிடையே நடைபாதை கடைக்காரர்களுக்கு, நகராட்சி சார்பில் சந்தைமேடு, காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் போதுமானதாக இல்லை எனக்கூறி, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், கடைகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.இதைதொடர்ந்து, திண்டிவனம் நெடுஞ்சாலை. உதவிகோட்ட பொறியளார் சார்பில், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும், ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் வரும் 18ம் தேதி வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் அகற்றப்படும் என்று, கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நடைபாதை கடைக்காரர்களுக்கு மாற்று இடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டசந்தைமேடு பகுதியில் மார்க்கெட் அமைப்பது குறித்து, ஆலோசனைக்கூட்டம், திண்டிவனம் சப்கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன், டவுன் டி.எஸ்.பி., திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நாகராஜ், நகராட்சி கணக்காளர் அண்ணாமலை, திண்டிவனம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், நடைபாதை கடைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட சந்தைமேடு பகுதியில், பொது மக்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில், திண்டிவனத்திலிருந்து செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களுக்குச் செல்லும் அரசு பஸ்களை நிறுத்தி செல்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.தொடர்ந்து தாசில்தார் தலைமையில், அதிகாரிகள் சந்தைமேடு பகுதியில் மார்க்கெட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X