பொள்ளாச்சி:பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரி சார்பில், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கல்லுாரி இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.இதில், பெற்றோர்கள், குழந்தைகளிடம் வாகனங்களை ஓட்ட தரக்கூடாது, காரில் செல்வோர் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என பொதுமக்களிடம் மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கல்லுாரி பேராசிரியர்கள் பாலாஜி விக்னேஷ், கவிதா, ஆர்.கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.