குறுகலான சோலையாறு ரோடு: விரிவுபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறுகலான சோலையாறு ரோடு: விரிவுபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

வால்பாறை;வால்பாறையில் இருந்து, சோலையாறு அணை செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும், வால்பாறை நகரில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால் அதிருப்தியடைந்துள்ளனர். நகராட்சி சார்பில் வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.வால்பாறையில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் உள்ள சோலையாறு அணை செல்லும், நெடுஞ்சாலைத்துறை ரோடு பல இடங்களில் விரிவுபடுத்தாமல் உள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வால்பாறை நகரிலிருந்து சோலையாறு அணை வரை உள்ள, ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டில் பல இடங்களில் தரைமட்ட பாலம் உயத்தப்படாமல் உள்ளது. பாலத்தை விரிவுபடுத்தி, உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்க வேண்டும். சில இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள ரோடுகளையும் சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X