வால்பாறை:சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான விருது பெற்ற, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலருக்கு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.வால்பாறை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ராபின்சன். இவர், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்தார். அவரது சேவையை பராட்டி கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சனுக்கு குடியரசு தினவிழாவில், மாவட்ட கலெக்டர் விருது வழங்கினார். தற்போது, பதவி உயர்வில் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் பொறுப்பேற்றுள்ளார்.விருது பெற்ற மாவட்ட கல்வி அலுவலருக்கு, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.