'தேர்த்திருவிழாவுக்குள் ரோடுகளை சீரமைக்கணும்!' குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தேர்த்திருவிழாவுக்குள் ரோடுகளை சீரமைக்கணும்!' குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : பிப் 12, 2019
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்க உள்ள நிலையில், ரோடுகளை சீரமைக்க வேண்டும்,' என, தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் காயத்ரி தலைமை வகித்தார்.தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் வரதராஜ், மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் கொடுத்த மனு:பொள்ளாச்சி நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதாள சாக்கடை தோண்டும் பணி நடக்கிறது. இதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் அரைகுறையாக மூடிவிட்டு சென்றுள்ளனர்.ரோட்டை சீரமைக்கும் பணி நடைபெறுவதே இல்லை. இதனால், பொதுமக்கள் குழிகளில் தவறிவிழுந்து படுகாயம் அடைகின்றனர். ரோட்டில் பறக்கும் புழுதியால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில், வரும், 12ம் தேதி முதல், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்குகிறது. வரும், 26ம் தேதி முதல், 3ம் தேதி வரை நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூவோடு ஏந்தி, கோவிலுக்கு வருவது வழக்கம்.ஆனால், ரோடுகள் மோசமாக இருப்பதால், பக்தர்களுக்கு பெரும் சிரமமும், விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பலமுறை நகராட்சியில் மனு அளித்தும், ரோடு அமைக்க நடவடிக்கை இல்லை.தேர்த்திருவிழா துவங்கும் முன், போர்க்கால நடவடிக்கையாக ரோடுகளை சீரமைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், நகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.'வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா' கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி வழியாக காய்கறி மற்றும் இதர சரக்குகளை அதிக பாரத்துடன் ஏற்றி செல்லும் லாரிகள் அதிக வேகத்துடன் செல்கின்றன.சுற்றுலா வரும் வாகனங்களும் அதிகளவு சுற்றுலா பயணிகளுடன் அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.நாட்டுக்கல்பாளையம், பாலமநல்லுார், பக்கோதிபாளையம் கிராம மக்கள் கொடுத்த மனு:பொள்ளாச்சி - சமத்துார் ரோட்டில், ரங்கசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கிருந்து பக்கோதிபாளையம் வழியாக பாலமநல்லுார் செல்ல, ஆறு கி.மீ., துாரத்துக்கு தார் ரோடு புதிதாக போடப்பட்டது.பழைய ரோட்டில், ஏழு இடங்களில் வேகத்தடை இருந்தது. தற்போது, அமைக்கப்பட்ட தார் சாலையில், 43 வேகத்தடைகள் உள்ளன. இந்த ரோட்டில், மூன்று இணைப்புச்சாலைகள் உள்ளன.இணைப்புச்சாலைகள் உள்ள இடத்தில், வேகத்தடை அமைக்காமல், மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X