கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடத்துக்கு.விரைவில், 'பூஜ்ஜியம்!'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடத்துக்கு.விரைவில், 'பூஜ்ஜியம்!'

Added : பிப் 12, 2019
Advertisement
 கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடத்துக்கு.விரைவில், 'பூஜ்ஜியம்!'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில், திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் முயற்சி, 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தில், தனிநபர் இல்லக்கழிப்பிட மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.பொள்ளாச்சி கிராமங்களில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பெரும்பாலான பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.வீட்டில் கழிப்பிடம் கட்டுவது, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஏழை, எளிய மக்கள் கழிப்பிடம் அமைக்க வசதி இல்லாததால், பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், திறந்தவெளியை தான் கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது.இந்நிலையில், சுகாதாரம் சீர்கெட்டது மட்டுமின்றி, பெண்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க திட்டமிட்ட மாநில அரசு, ஊருக்கு ஊர் பொதுக்கழிப்பிடம் அமைத்துக் கொடுத்தது. ஆனால், பராமரிப்பின்றி, தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பொதுக்கழிப்பிடத்தால் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க முடியாமல் தோல்வியடைந்தது.இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, வீட்டில் கழிப்பிடம் இல்லாதவர்கள்,அமைத்துக் கொள்ள, மத்திய, மாநில அரசு மானியமாக, 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது.துவக்கத்தில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் திட்டத்தை சரிவர பயன்படுத்தாமல் இருந்தனர். அரசின் விழிப்புணர்வு விளம்பரங்கள், வீட்டில் உள்ள பெண்களின் அழுத்தம் காரணமாக, கழிப்பிடம் கட்ட ஆர்வம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் கடந்த, 2016 - 17ம் ஆண்டு, 1,505 பயனாளிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. 2017 - 18ல் அந்த எண்ணிக்கை, 6,001 என, உயர்ந்தது. நடப்பாண்டில், 1,035 பேருக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஒன்றியத்தில், 2016 - 17ல், 1,012 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. 2017 - 18ல் மானிய ஒதுக்கீடு இல்லை. நடப்பாண்டில், 1,820 பயனாளிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையில், 527 பேருக்கு வழங்க இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தற்போது தனிநபர் இலக்கழிப்பிடம் அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.தனிநபர் இல்லக்கழிப்பிட மானியத்தால், கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம், 70 சதவீதம் குறைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், பூஜ்ஜியம் என்ற நிலை மாறும் என்ற நம்பிக்கையைஏற்படுத்தியுள்ளது.விழிப்புணர்வு ஒவியங்கள்!மத்திய அரசு, துய்மையான, அழகிய கழிவறை என்ற பொருள்படும் 'சுவச் சுந்தர் ஷவுச்சாலயா' என்ற திட்டத்தை துாய்மை பாரத இயக்கத்தின் கீழ், கடந்த ஜன., 1ம் தேதி முதல் செயல்படுத்துகிறது. இதற்கு நாடு முழுக்க, 2.5 லட்சம் ஊராட்சிகள் தேர்வு செய்து, கழிவறைகளில் துாய்மை விழிப்புணர்வு ஒவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்படுகின்றன.பொள்ளாச்சி ஒன்றியங்களில் ஊராட்சிக்கு ஐந்து வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, தனி நபர் இல்லக் கழிப்பிடங்களில் துாய்மை விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதற்கு, மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X