கிணத்துக்கடவு:ஊராட்சிகள் சார்பில், 500 ரூபாய்; ஒன்றியம் சார்பில் தலா, 2,500 ரூபாய் செஞ்சிலுவை சங்கத்துக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும், அனைத்து ஊராட்சிகளும், கோவை செஞ்சிலுவை சங்கத்துக்கு, தொகை செலுத்த வேண்டும்.ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் சார்பில் தலா, 2,500 ரூபாய், ஊராட்சிகள் தரப்பில் தலா, 500 ரூபாய் இம்மாத இறுதிக்குள் காசோலையாக வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.