குடிமை மருத்துவ அலுவலர் பணியிடம் நிரப்ப கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிமை மருத்துவ அலுவலர் பணியிடம் நிரப்ப கோரிக்கை

Added : பிப் 12, 2019
Advertisement

ஆனைமலை:கோட்டூர் அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள குடிமை மருத்துவ அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கோட்டூர், அங்கலக்குறிச்சி, நவமலை, கம்பாலபட்டி, ரமணமுதலிபுதுார் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர்.வெளிப்புற நோயாளியாக தினமும், 450க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில், 40 பேர் உள்நோயாளியாக தங்கும் வசதி உள்ளது.மருத்துவமனையில், ஒரு குடிமை மருத்துவ அலுவலர், மூன்று உதவி மருத்துவ அலுவலர் பணியிடம் உள்ளது. இந்நிலையில், கடந்த, மூன்று ஆண்டுகளாக முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. ஒரு உதவி மருத்துவ அலுவலர் இப்பணியிடத்தை தற்போது கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.மீதமுள்ள, இரண்டு டாக்டர்கள் காலை மற்றும் மாலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கூடுதல் பொறுப்பால் டாக்டரின் பணிச்சுமை அதிகரிக்கிறது.டாக்டர் பற்றாக்குறையால், இரவு நேரங்களில் மருத்துவமனையில் டாக்டர் பணியில் இருப்பது இல்லை. தீவிர காய்ச்சல், வயிற்றுவலி, மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக இரவு நேரத்தில் வரும் நோயாளிகள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறும் அவல நிலைஏற்படுகிறது.குடிமை மருத்துவ அலுவலர் பணியிடத்தை நிரப்பி, இரவு நேரமும் டாக்டர் பணியில் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X