விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள்

Added : பிப் 12, 2019
Advertisement
 விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள்

பொள்ளாச்சி;'சாலை விதிகளை கடைபிடித்து, விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும்,' என, பொள்ளாச்சி நகராட்சி பள்ளி விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இந்திரஜித் வரவேற்றார்.மேற்கு எஸ்.ஐ., சின்னகாமணன் பேசியதாவது:சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் போதும்; பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் கவனமுடன் ரோட்டை கடக்க வேண்டும்.வாகனங்கள் வருகிறதா என பார்த்துச் செல்ல வேண்டும். கவனமின்றி சாலைகளை கடக்க கூடாது; வேகமாக ஓடக்கூடாது. வாகனங்களில் செல்லும் போது, கவனமாக செல்ல வேண்டும். மற்ற வாகனங்களை முந்திச் செல்ல அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.பள்ளிப் பருவ வயதில் இருந்தே, சாலை விதிகளை கடைபிடிக்க துவங்கினால், மாற்றத்தை ஏற்படுத்தும்.'ெஹல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும்; 'சீட் பெல்ட்' அணியாமல் கார் இயக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.'சிக்னல்' பகுதியில் எப்படி ரோட்டை கடக்க வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். விபத்தில் சிக்குவதால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, கவனமுடன் வாகனம் ஓட்ட வேண்டும்.இவ்வாறு, பேசினார்.நிகழ்ச்சியில், 'போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம்; விபத்துகளை தவிர்ப்போம்,' என மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X