சைக்கிளுக்கு பதிலாக குளிர்கால உடை: மலைப்பகுதி மாணவர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளுக்கு பதிலாக குளிர்கால உடை: மலைப்பகுதி மாணவர்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

வால்பாறை:மலைப்பகுதி மாணவர்களுக்கு இலவச சைக்கிளுக்கு பதிலாக, குளிர்கால உடை வழங்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வால்பாறையில் உள்ள பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.ஆனால், வால்பாறையில் வழங்கப்படும் சைக்கிள்களை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து செல்லும் கரடுமுரடான எஸ்டேட் ரோடுகள், மேடு பள்ளங்கள் நிறைந்த ரோடு, பகல் நேரத்திலேயே நடமாடும் வனவிலங்குகள், மழை போன்ற காரணங்களால் பள்ளிக்கு சைக்களில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.பள்ளி மாணவர்கள் கூறுகையில், அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் இலவச சைக்கிளால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை.பெரும்பலான நாட்கள் மழை பெய்வதாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தாலும் சைக்கிள் பயணத்தை தவிர்த்து, பஸ்களை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.எனவே, வால்பாறை மலைப்பகுதி மாணவர்களுக்கு சைக்கிள்களுக்கு பதிலாக, மழைகால 'ஸ்வெட்டர்' மற்றும் 'ஷூ' வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X