பெட்டிக்கடைகளிலும் மது விற்பனை 'சில்லிங்' விற்பதை தடுக்காத போலீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெட்டிக்கடைகளிலும் மது விற்பனை 'சில்லிங்' விற்பதை தடுக்காத போலீஸ்

Added : பிப் 12, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறையில் தடையை மீறி, மது 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடக்கிறது.வால்பாறை நகர், சோலையாறு அணை, பாரளை ஆகிய மூன்று இடங்களில், அரசு மதுகடைகள் செயல்படுகிறது.மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வால்பாறை நகரில், தங்கும் இடத்திற்கே சென்று மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது.பெட்டிக்கடைகளில் 'சரக்கு' பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும், சுற்றுலா பயணிகள் வாகனங்களை குறிவைத்தும், 'சில்லிங்' விற்பனை ஜோராக நடக்கிறது.உள்ளூர் போலீசாரும் இதை கண்டு கொள்ளாததால், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் 'சில்லிங்' விற்பனை தினமும் களைகட்டுகிறது. இதனை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் இருந்து, கூடுதல் மதுபானங்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.போலீசார் இதனை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வால்பாறையில் 'சில்லிங்' விற்பனையை தடுக்க முடியும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X