பெண்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி: மாநில அளவில் மாற்றப்பட்டதால் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி: மாநில அளவில் மாற்றப்பட்டதால் பாதிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

உடுமலை:ஆதரவற்றோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாநில அளவில் மட்டுமே வழங்கும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டுள்ளதால், ஆதரவற்ற பெண்கள் இவ்வாய்ப்பை இழந்து வருகின்றனர்.மகளிர் திட்டத்தின் சார்பில், ஆதரவற்ற மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கும் திட்டம், கடந்த 2014 முதல் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், கணவாரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், முதிர் கன்னிகள், உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு, தொழில் வாய்ப்புகள் வழங்குவது, தொழில் திறன் பயிற்சி மற்றும், 5 உறுப்பினர்களைக்கொண்ட குழுவாக அமைத்து, அரசின் சார்பில் கடனுதவி ஏற்பாடு செய்து, சுயதொழில் வாய்ப்பு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தில், 17 முதல்,45 வயது வரையுள்ள பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பெயர் பட்டியல், கிராம சபைக்கூட்டங்களில் சமர்பிக்கப்பட்டு, திட்டத்தில் தகுதியுள்ளவர்களாக ஒப்புதல் பெறுகின்றனர். திட்டத்தின் சார்பில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்குவதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பலரும் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு வரை, ஒவ்வொரு வட்டாரத்திலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. தற்போது, இப்பயிற்சிகளுக்கென, தேர்வு மட்டுமே வட்டார அளவில் நடக்கிறது. பயிற்சி வகுப்புகள், மாநில அளவில், ஒரே இடத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.இத்திட்டத்துக்கு, மத்திய அரசின் சார்பில் 70 சதவீதம் நிதிஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், மாநில அளவில், பயிற்சிகள் வழங்கும் நடைமுறையை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையால், பலரும் பயிற்சி பெற முடியாமல், வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X