விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: 1,500 பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: 1,500 பேர் விண்ணப்பம்

Added : பிப் 12, 2019
Advertisement

அன்னுார்:சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் அன்னுார் தாலுகாவில் நேற்று ஒரே நாளில், 1,549 பேர் விண்ணப்பித்தனர்.விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. உரம், பூச்சி மருந்துகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. மழையும் போதுமானதாக இல்லை. இதனால் பல மாவட்டங்களில் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.இதையடுத்து, விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஐந்து ஏக்கர் வரை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இந்த நிதியுதவி பெற தகுதி படைத்தவர்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும், 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்தில் நேற்று அன்னுார் தாலுகாவில் உள்ள மூன்று பேரூராட்சி, 21 ஊராட்சிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அன்னுார், காட்டம்பட்டி உள்ளிட்ட பல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் காலை முதல் விவசாயிகள் குவிந்தனர்.ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சிட்டா, பாங்க் பாஸ் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் போட்டோக்களுடன் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வந்தனர்.வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். எனினும் கடந்த நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் பெறுபவர்கள், குரூப் டி ஊழியர்களை தவிர இதர அரசு ஊழியர்கள், முன்னாள், இன்னாள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.அன்னுார் தாலுகாவில் நேற்று ஒரே நாளில், 1,549 பேர் விண்ணப்பித்துள்ளனர். 13ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து, ஆன் லைன் முறையில் பதிவேற்றம் செய்ய உள்ளோம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வரும் 24ம் தேதிக்குள் முதல் தவணையான 2,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வந்து விடும்.இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X