1,704 பயனாளிகளுக்கு ரூ.6.13 கோடி உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,704 பயனாளிகளுக்கு ரூ.6.13 கோடி உதவி

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை:மதுரை மாநகராட்சியில் 1704 பயனாளிகளுக்கு 6.13 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வருவாய், உள்ளாட்சி, போலீஸ் அலுவலர் குழுக்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செல்லுார் ராஜூ பேசுகையில், மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் நடப்பு நிதியாண்டில் 3000 பயனாளிகளுக்கு 11.01 கோடி ரூபாயும், 24 கிலோ தாலிக்கு தங்கமும் முதற்கட்டமாக வழங்கப்பட்டது. 53,964 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 52,227 பேருக்கு விதவை உதவித்தொகை உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X